Tuesday, 25 September 2012

லினக்ஸ் கற்றுக்கொள்ள விரும்பு.....

1.ஏதாவதொரு நல்ல சிறப்பான லினக்ஸ்ஐ நிறுவ கற்றுக்கொள்ளவும்.(உங்கள் நண்பர்களில் யாருக்காவது லினக்ஸ் பற்றி தெரியுமானால் அவர்களிடம் தெளிவாக எப்படி நிறுவுவது என்று தெரிந்து கொள்ளவும்)
2.நம்முடைய இந்த வலைப்புவில் கொடுக்கப்பட்டிருக்கும் (தமிழில் லினக்ஸ் கற்றுக்கொள்ள என்ற தலைப்பின் கீழ் ) வலைப்பூவினை நன்றாக படித்து தெரிந்துகொள்ளவும் .
3.தொடக்க நிலை லினக்ஸ் பயனாளர்களுக்கு உபுண்டு லினக்ஸ் சரியான தேர்வாகும் .
4.இணையத்தில் லினக்ஸ் சம்பந்தமான தகவலினை தேடவும்.
5.முடிந்தால் LINUX FOR YOU என்ற இதழினை படித்துவரவும்.
5.லினக்ஸ் கமண்டினை செயல்படுத்தி பயிற்சி எடுக்கவும்.

குனு என்றால் என்ன ?

  • யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்கிட 1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட திட்டம் குனு (GNU). இதனை துவக்கியவர் ரிச்சர்ட் ஸ்டால்மேன் . இந்த இயங்கு தளம் ஒரு கட்டற்ற மென்பொருளாகும்(Free Software). இதற்கு குனு அமைப்பென்று பெயர்.
  • குனுவின் கரு (Kernal) பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப்படுகிறது.
  • இன்றுபல கோடி பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினசின் கூட்டமைப்பிற்கு குனு / லினக்ஸ் என்று பெயர்.
  • "குனு யுனிக்ஸ் அல்ல" (Gnu's Not Unix) என்பதன் பெயர்ச் சுருக்கமே குனு ஆகும். கு - நூ என
  • இது உச்சரிக்கப்படுகிறது. விளங்கு எனும் போது எழும் குற்றியலுகரத்தை போல் இதிலுள்ள 'கு' ஒலிக்கும்.
  • இணையத்தளம்: www.gnu.org
குறிப்பு: இந்த தகவல் கட்டற்ற மென்பொருள் - ரிச்சர்ட் ஸ்டால்மன் - தமிழாக்கம் - ம.ஸ்ரீ.ராமதாஸ் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.